Pages

Wednesday 4 July 2012

பௌத்த & Muslim பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத ஒரு சட்டம்


பிக்குமார்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத ஒரு சட்டம் வெகுவிரைவில்.. கோபத்தின் உச்சத்துக்கு போன ஜாதிக ஹெல உறுமய

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க கொண்டு வரப்பட உள்ள சட்டமூலம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது

இதனை அடுத்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளர சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

"பிக்குமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது கூடியளவில் திருப்தியளிக்கவில்லை.

பௌத்த பிக்குகள் இலங்கை வரலாற்றில் உள்நாட்டு ஆட்சியிலும் ஏனைய நிர்வாகங்களிலும் முக்கிய பங்குகளை வகித்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அப்போதும் இப்போதும் இடம்பெறுகின்றன. " என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ பிக்குமார்கள் பாராளுமன்றம் வருவதை தடுக்கும் வகையிலான தனி நபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன் வைக்க உள்ளார்.

"பிக்குமார்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதை யாராலும் தடுக்க இயலாது. இதனை ஜாதிக ஹெல உறுமய வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து பேசியுள்ளோம். இச்சந்திப்புகள் கூடிய திருப்தியளிக்கவில்லை. நாட்டு மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களை பாராளுமன்றத்தாலும் தீர்மானிக்க முடியாது.

பாராளுமன்றத்தில் அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாகும்.

எனவே, எவ்விதமான பிரேரணைகளை பிக்குமார்களுக்கு எதிராக கொண்டு வந்தாலும் அதனை தோல்வியடையச் செய்வோம். நாட்டிற்கு பிக்குமார்களின் தலைமைத்துவமும் வழிநடத்தலும் இன்றியமையாதவையாகும். எனவே, பிக்குமார்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment