Pages

Thursday 19 July 2012

உலகம் எதிர் கொண்டுள்ள 10 முதன்மை சவால்கள்

நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நவீனயுகம் தொழிநுற்பத்திலும் விஞ்ஞானத்திலும் ஆய்வுத்துரையிலும் எந்தளவிற் முன்னேறி உள்ளது அதே அளவு அல்லது அதனையும் விட சற்று அதிகமான அளவு உளவு பல நவீன சவல்ககளை எதிர் கொண்ட வன்னமே உள்ளது, அந்த வகையில் 2012 இல் உலகம் எதிர் கொண்டுள்ள மிக முக்கியமான 10 சவால்களை நேஒவ ஊhயபெந வாசகர்களுக்காக நாம் இங்கு தருகிறோம்.

01. தேசிய வாதமும் அடையாள போராட்டமும் (Erosion of National Pride/ Identity)

நவீன தேசியவாத அரசுகளின் தோற்றத்திற்கு பிற்பாடு நாடுகளுக்கு இடையே தோன்றிய வளப்பகிற்வுப் போட்டியில் ஏற்பட்ட மிக மோசமான யுத்தங்கள், விமர்சனங்கள், பொருளாதார தடைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் என்பன இவ் தேசிய வாதமும் (Join with Next Change we will change your style ) அடையாள போராட்டமும் என்ற நவீன சவாலுக்கு கீழ் வருகின்றன.

02. வறுமை (Poverty)

வறுமை என்ற சவால் இன்று சமூகத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமாக அமைகின்றன. எயிடஸ், கொள்ளை மற்றும் பொருளாதார நெறுக்கடி என்பன இவற்றில் சிலவாகும்.
Join with Next Change we will change your style

03. சடத்துவ வாத பொருளாதாரம் (Shifting Economy)

நவீன பொருளாதார ஒழுங்கு உலகில் அமைதி ஒழுங்கு சமத்துவம் என்பவற்றை வழர்ப்பதற்கு பதிலாக சமூக ஏற்றத்தாழ்வையும், சுறண்டல், பொய், வட்டி மற்றும் கட்டுப்பாடு அற்ற மோசடிகளையும் அபிவிருத்தி அடையச்செய்துள்ளது. சுருக்கமாக கூறின் நவீன பொருளாதாரத்திட்டம் சில தேசிய வாதிகளின் பாதுகாப்பு அறனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

04. சமத்துவம் அற்ற கல்விக் கொள்கை (Education Disparity)

கல்வி சமூகத்தின் சிந்தனைப்பாங்கை மாற்றும் - சிந்தனை மாற்றம் ஆரோக்கியமான சமூக, அரசியல் பொருளாதார மற்றும்; கலாச்சார மாற்றத்திற்கு வழிவகுக்கும். கல்வி எச்சமூகத்திற்கு சமத்துவமற்ற விகிதத்தில் வழங்கப்படுகின்றதோ அல்லது கல்வி புறக்கணிக்கப்படுகின்றதோ அச்சமூகம் அழிவின் விழிம்பில் வாலும் என்பதில் அய்யமில்லை

05. உடற்பருமன் (Obesity)
 
இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கம், தமது அதிக நேரங்களை Video Games, Facebook, இ போன்ற உடலுக்கு ஆரோக்கியமற்ற விடயங்களில் செலவிடல் சீரான உடற்பயிற்ச்சி இன்மை மற்றும் அதிக நேரம் தொலைக்காட்ச்சி, கையடக்க தொலைபேசி பாவனை என்பன இன்றைய இளையவர்களையும், பெறியவர்களையும் பாதித்தமையால கட்;டற்ற உடற்பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உடற்கட்டமைப்பு ஆகியவை மிக ஆபத்தான சவாலாக இன்று மாறி உள்ளது.

06. சடத்துவவாதம் (Materialism)

இன்று பின்பற்றப்படும் நவீன சமூக ஒழுங்கானது சடத்துவவாதத்தையும் மணிதம் அற்ற மணிதனையுமே உருவாக்குகின்றது. அன்பு விட்டுக் கொடுப்பு பிறர் நலன் என்ற விடயங்கள் பாடத்திட்டங்களாக மாத்திரம் சுருங்கி உள்ளது. நாய் என்ற மிருகம் மணிதன் என்ற தண்மையினை தாண்டி கௌரவிக்கப்படுகின்றது.

07. பள்ளிகளில் ஆயதக் கலாச்சாரம் (Violence in Schools)

ஆயதக்கலாச்சாரத்தின் உச்ச விளைவாக பாதுகாப்பு ஆயுதங்கள் இன்று மல்லிகைக் கடைகளில் விற்கக் கூடிய சரக்குகளாக மாறி உள்ளது. சரியான பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு பேணப்படாமையினால் பாடசாலைகளிலும் தெருக்களிலும் ஆயதம் ஏந்திய கும்பல்கள் சர்வசாதாரணமாகி உள்ளது.

08. ஆசாதாரன வளர்ச்சி (Growing up too Fast)

இன்றைய பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இரசாயனம் கலந்த உணவுக்ள மற்றும் அலவிற்கு அதிகமான உணவுப் பழக்கம் மற்றும் அபத்தமான சினிமா என்பவற்றின் விளைவாக குறிப்பாக பெண்கள் தமது அன்னலவான வயதிற்கு முன்னறே பூப்பெய்வது (வயதிற்கு வருவது) இன்று பாறிய சமூகப்பிறச்சினையாக மாறி உள்ளது.(Join with Next Change we will change your style )

09. போதைப் பொருள் பாவனை ( Drug/Alcohol Abuse)

உதடு உள்ள ஒவ்வொருவருக்கும் என்ற இலக்குடன் இன்று சமூகத்தில் சற்வ சாதாரயமாக வலம் வரும் போதைப் பொருள் மற்றும் சிகரட் என்பன ஆரோக்கியம் அற்ற மண உழசை;சலுக்கு உள்ளான விரக்தி கொலை சமூக விடயங்களில் ஆர்வமில்லாத ஒரு இளைய சமூதாயத்தை உருவாக்கி உள்ளது.(Join with Next Change we will change your style )

10. ஒற்றை பெற்றோர் (Single Parent Households)

1950ஆம் ஆண்டு முதல் மிகப் பணங்கரமாக வளர்ந்து வரும் ஒற்றை பெற்றோர் (Single Parent Households) ) அதாவது தந்தை தெறியாத நிலையில் பிறந்த குழந்தை அல்லது பல தந்தைக் குழந்தை, தாயுடைய அரவனைப்பில் மாத்திரம் வளரும் குழந்தை. இதன் விலைவு இன்று அனுபவிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் முரட்டுத்தனம் கொண்ட குழந்தை மற்றும் சமூக சீற்அழிவிற்கு வித்திடும் இளை சமூதாயம் என்பவற்றை உருவாக்கி உள்ளது, 
(Via FB by Next Change)

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

Wednesday 4 July 2012

பௌத்த & Muslim பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத ஒரு சட்டம்


பிக்குமார்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத ஒரு சட்டம் வெகுவிரைவில்.. கோபத்தின் உச்சத்துக்கு போன ஜாதிக ஹெல உறுமய

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க கொண்டு வரப்பட உள்ள சட்டமூலம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது

இதனை அடுத்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளர சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

"பிக்குமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது கூடியளவில் திருப்தியளிக்கவில்லை.

பௌத்த பிக்குகள் இலங்கை வரலாற்றில் உள்நாட்டு ஆட்சியிலும் ஏனைய நிர்வாகங்களிலும் முக்கிய பங்குகளை வகித்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அப்போதும் இப்போதும் இடம்பெறுகின்றன. " என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ பிக்குமார்கள் பாராளுமன்றம் வருவதை தடுக்கும் வகையிலான தனி நபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன் வைக்க உள்ளார்.

"பிக்குமார்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதை யாராலும் தடுக்க இயலாது. இதனை ஜாதிக ஹெல உறுமய வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து பேசியுள்ளோம். இச்சந்திப்புகள் கூடிய திருப்தியளிக்கவில்லை. நாட்டு மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களை பாராளுமன்றத்தாலும் தீர்மானிக்க முடியாது.

பாராளுமன்றத்தில் அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாகும்.

எனவே, எவ்விதமான பிரேரணைகளை பிக்குமார்களுக்கு எதிராக கொண்டு வந்தாலும் அதனை தோல்வியடையச் செய்வோம். நாட்டிற்கு பிக்குமார்களின் தலைமைத்துவமும் வழிநடத்தலும் இன்றியமையாதவையாகும். எனவே, பிக்குமார்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)