Pages

Friday 20 August 2010

Certificate Course in Tafseer by Br. M.A.M. Mansoor (Plus*)


Certificate Course in Tafseer Juzu Amma (the 30th Juzu)
By M.A.M. Mansoor (Plus*)
Duration : 3 months (Level - I )
Time : 5.30pm to 7.30pm (Wednesday)
Place : WAMY Hall, Colombo-09
Medium of Instruction : Tamil
Course Fee : Rs. 1,500/-
Reg. Fee : Rs. 500/-

Application Closing Date : August 27, 2010
Course Start Date : September 01, 2010

Note:
Only limited seats available
Preference for professionals
All course materials are provided
Find the attached application

For more information:

Br. M.A. Izzadeen: 0772262640, 0714964281
Email: islamicstudies_wamylanka@yahoo.com

WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH (WAMY-SRI LANKA)
658/83-1/1, Mahawila Gardens, Baseline Road, Colombo-09.Tel: 011-4616652,
Fax: 011-2688606,
e-mail: wamy-lanka@sltnet.lk wamy-lanka@eureka.lk Web: http://www.wamylanka.org/

(NB: Plus*; The holy quran says.....the man was created weak...4:28)

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday 15 August 2010

புத்தியுடன் செயற்படுவோம்!

மாண்புமிகு இஸ்லாத்தின்
மகத்துவத்தை பறைசாற்றும்
நோன்புதனை தினம்நோற்று
தீன்வழியில் நடந்திடுவோம்

வீண்பேச்சு சபலங்கள்
விளையாட்டு விவாதங்கள்
கூண்டோடு அத்தனையும்
குழிதோண்டி புதைத்திடுவோம்

காலைமுதல் மாலைவரை
கவனமுடன் நோன்பிருப்போம்
ஏழைகளின் பசிதன்னை
எப்படியென் றறிந்திடுவோம்

நாட்கள் முப்பதும் நாம்
நல்லபடிநோன்பிருந்து
பாவங்கள் கழுவி இன்றே
பரிசுத்த மாகிடுவோம்

புறம்கூறல் பொய்சொல்லல்
பொறாமையிலே குழிபறித்தல்
அறமல்ல என்றுணர்ந்து
அனைவருமே ஒழுகிடுவோம்

நோய்தீரும் என்பதற்காய்
நோன்புதனை நோற்காமல்
வாய்காட்டி வாழாமல்
வாய்மையுடன் வாழ்ந்திடுவோம்

அநியாயம் அக்கிரமம்
அத்தனையும் தவிர்த்திடுவோம்
துனியாவில் இஸ்லாத்தின்
தூய்மையினை எடுத்துரைப்போம்

இல்லாத மக்களுக்கு
இயன்றவரை ஈந்திடுவோம்
பொல்லாத குணங்களினை
 போரிட்டு பொசுக்கிடுவோம்

அல்லாஹ்வின் நாமத்தை
அடிநெஞ்சில் வளர்த்திடுவோம்
வல்லோனின் சொல்லொன்றே
 வாழ்வென்று வாழ்ந்திடுவோம்

தேன்போன்ற நபிகளாரின்
சுன்னத்தை கடைப்பிடிப்போம்
ஆண்பெண்கள் அனைவருமே
அல்குர்ஆன் வழி நடப்போம்

மதம் எதுவாயிருந்தாலும்
மரியாதை கொடுத்திடுவோம்
புரிந்துணர்வை நாம்வளர்த்து
புத்தியுடன் செயற்படுவோம்

By:  கவிஞர் அஸ்மின்

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Tuesday 3 August 2010

கிராமிய அபிவிருத்தியின் இயல்பு

கிராமிய அபிவிருத்தி என்பது ஒரு சிக்கலான தோற்றப்பாடாகும். கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் உற்பத்தித் திறன், உழைக்கும் ஆற்றல் என்ப வற்றை நிரந்தரமான அடிப்படையில் மேம் படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையுடன் கிராமிய அபிவிருத்தி தொடர்புற் றுள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக அபிவிருத்தி அறிக்கைக்கிணங்க அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட வறிய மக்கள் உள்ளனர். அவர்களுள் பெரும்பாலா னோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். இக்கிராமிய மக்களின் பிரச்சினை கள் பலதரப்பட்டதாக இருக்கின்றன.

இவர்கள் பிரதானமான மூன்று தொகுதிகளில் அடங்குகின்றனர். இவர்கள் நிலமற்றோர், வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இருப்பவர்கள், சிறுநிலச் சொந்தக் காரர்கள் ஆகியோராவர். இவர்கள் அனைவரிடமும் சில விடயங் களில் பொதுத்தன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு, குறைந்தளவு வாழ்க்கைத் தரத்தைப்பேண உதவுவதற்குக்கூட போதிய வழிமுறைகளற்ற நிலை, சுகாதா ரம், கல்வி, சுத்தமான நீர், மலசலகூட வசதிகள், பாதைகள், மின்சாரம், தொலை பேசிகள் போன்ற சமூக சேவைகளை அடைந்துகொள்ள இவர்களால் முடிய வில்லை. ஊட்டச்சத்தின்மை, பொருத்தமான இருப்பிடமில்லாத குறை பாடு, இயற்கை அனர்த்தங்களின் போது உதவியின்மை போன்ற வற்றால் அவதியு றுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட மூன்று வகையான மக்களையும் வித்தியாசமான முறையில் அணுகியே அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியுள்ளது. உதாரணமாக, சிறுவிவசாயிக்கு கடனைப்பெற்றுக்கொள்ள ஆதரவு தேவைப் படலாம். இவ்வாறான கடனுதவித் திட்டத்திலிருந்து நிலமற்றவர் பயனடை யப் போவதில்லை. அவருக்கு சிலவேளை தொழில் தேவையாக இருக்கும். அவ்வாறே வாடகைக்கு இருப்ப வரைப் பொறுத்தவரையில் தொழில் வாய்ப்பை விடவும் வாடகையுடன் தொடர்பான சிறந்த ஒப்பந்த விதிமுறை கள் தேவைப்படும்.

கிராமிய வறியோரின் விபரக்கோவை

வளர்முக நாடுகளிலுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள வறிய மக்களினை அடையாளப்படுத்தும் விபரக்குறிப்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

* முன்னேற்றகரமான தொழிநுட்பம் நீர்ப்பாசனம், வித்துகள், உரவகைகள், விவசாய உபகர ணங்கள், களைகொல்லிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள இயலாமை. மிகவும் வறியவர்களாக இருப்பதால் விவசாயத்திற்குத் தேவை யான மேற்குறிப்பிடப் பட்ட வளங்களை கொள்வனவு செய்வதற்கோ, வாட கைக்கு பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலையில் உள்ளனர். மேலும், அவர் கள் கடனைப்பெற்றுக் கொள் வதற்கான அமைப்பும் இல்லை. கடனாகப் பெற் றுக் கொள்ளும் வாய்ப்புகளும் இல்லை.

* ஏழை விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பொது அமைப்புகளைச் சென்ற டையக்கூடிய நிலையில் இல்லை. அவர்களது விடயங்கள் நகர்ப் புறங்களில் அமையப்பெற்றுள்ள அலுவலகங்களில் தீர்மானிக்கப் படுகின்றன. இவ்வலுவலகங்களை ஏழை விவசாயிகளால் இலகுவில் அடைந்துகொள்ள முடியாதுள்ளது. இதன் விளைவாக அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடிய வில்லை. அவர்களது மனதில் எழும் உற்சாகம் புண்படுத் தப் பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது, அவர் கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

* வறிய விவசாயிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பின்மை. பணக்காரர்களும் பலசாலிகளும் இவர்களுக்குப் புரியும் தவறுக ளுக்கு நீதி தேடுவதில் நீண்ட நேரத்தை வறிய விவசாயிகள் செலவிடுகின்றனர்.

* நகர்ப்புற நிர்வாக அலுவல கங்களும் கிராமப் பகுதிகளிலுள்ள தனவந்தர்க ளும் கூட்டாகப் புரிகின்ற பரந்தளவிலுள்ள ஊழல், கிராமிய வறியவர்களை மன நெருக்கீடுகளுக்கு ஆளாக்கியுள் ளது.

வறுமைக்கான காரணங்கள்

வறுமைக்கான காரணிகள் சிக்கலானவையாகவும் வரலாற்று ரீதியானவையா கவும் அமைந்துள்ளன. சொத்துரிமை, அதிகார பலத்தின் கட்டமைப்பு என்ப வற்றை நிர்ணயிக்கின்ற சமூக, கலாசார சக்திகள் கிராமிய வறுமைக்கு பிர தானமாக பங்களிக்கின்றன. வறுமைப் பிரச்சினையை உக்கிரப் படுத்துவதில் அரச கொள்கைகள் பெரும்பாலான விடயங்களில் பங்களித்துள்ளன. உதாரண மாக : நகர்ப்புற கைத்தொழில் மயமாக்கலுக்கு ஆதரவு வழங்குவதன் காரண மாக கிராமப் பகுதியிலுள்ள வளங்கள் நகர் புறங்களுக்கு நகர்த் தப்பட அதிக மாக வழிவகுக்கின்றன.

அவ்வாறே, கிராமங்களிலுள்ள பெரும்பான்மையான வறியவர்களை முன்னேற் றும் நோக்கில் வகுக்கப்பட்ட கொள்கைகளை நோக்கி சிறியளவு தொகையின ரும் பணக்காரர்களும் மாத்திரமே பயனடையும் விதத்தில் அவை நடை முறைப் படுத்தப்படுகின்றன. வளர்ச்சிய டையாத நிதிக்கட்டமைப்பும் கிராமிய வறுமையை அவ்வாறே நிலைத்திருக்கச் செய்கிறது. ஒரு சில வறிய கிராம மக்கள் சேமிப்பதற்குரிய ஆற்றலிருந்தும் உற்பத்திப் பயன்பாடுகளை நோக்கித் தமது சேமிப்பை வழிப்படுத்த முடியவில்லை. மேலும், கிராமப் பகுதிகளில் அபிவிருத்தியடைந்த நிதிச்சந்தைகள் இல்லாமையால் நிதித்தேவையுடையோ ரால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பரந்தளவிலானதிட்டம்

கிராமிய அபிவிருத்தி என்பது பொருளாதார மாறிகளில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமல்ல. இதற்காக பல்வேறு கோணங்களிலிருந்தும் வறுமை ஒழிப்பிற்கான பலமுனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இது குறித்து பொருளியலாளர்கள், சமூக விஞ்ஞானிகள், சமூகப் பணியாளர் கள், நன்கொடை முகவர்கள், கிராமிய கடன்வழங்கும் நிறுவனங்கள், அரசாங் கங்கள் பரவலாக கலந்து ரையாடியுள்ளன. குறைந்தது இரு விடயங்களில் அவர்களிடையே கருத்தொற்றுமை நிலவுகிறது.

01. கிராமப் பகுதிகளில் சந்தையை ஆதாரமாகக் கொண்ட, ஊக்குவிப் புகளை வழங்குகின்ற, சமூக உட்கட்டமைப்பை கட்டியெழுப்பும் கொள்கைகள் ஊடாக ஏழைகளின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப் படவேண்டும். கிராமப்பகுதிக ளுக்கு பாதைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள், குடிநீர், ஆரோக்கியமான சூழ்நிலை, சாக்கடைக் கழிவகற்றும் வடிகாலமைப்பு, போதிய சந்தை முறை ஆகிய வசதிகள் வழங்கப்படவேண்டும்.

02. விவசாயப் பண்ணைத் தொழிலை முன்னேற்றும் நிகழ்ச் சித் திட்டமொன்று இருக்கவேண்டும். பண்ணைக் கைத்தொழிலுக் குரிய முன்னேற்றகரமான உள் ளீடுகள் கைவசம் இருப்பதுடன் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வு முடிவுகள் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடியதாக தயார் நிலை யில் இருக்கவேண்டும். (Meelparvi Plus*)

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

கல்விப் பணியில் மூன்றாவது அணியினர் புதிய நோக்கு

பாடசாலைக்கல்வி, மத்ரஸாக் கல்வி ஆகிய இரண்டை யும் மற்றொரு கண் ணோட்டத்திலும் நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப் பிட்டது போன்று பாடசாலைக் கல்வி பெற்றோரும், மத்ரஸாக் கல்வி பெற் றோரும் சுதந்திர இலங்கையில் இரு துருவங்களாக இயங்கினர். பின்னர் சுதேச கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி, மத்ரஸாக் கல்வியில் ஏற்பட்ட மாற்றம் போன்றன அந்தத் தீவிரத்தை ஓரளவு தணித்தன. எனினும், இருவகைக் கல்விக்குமிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதில் மூன்றாவது அணியினர் கவனம் செலுத்தவில்லை.

அதாவது, மத்ரஸாக் கல்வி ஷரீஆக் கல்வியாகவும், பாடசாலைக்கல்வி உலகி யற் கல்வியாகவுமே கற்கப்பட்டது. ஒரு பாடசாலை மாணவன் புவியியல், வர லாறு, குடிமையியல் போன்ற பாடங்களை எவ்வாறு கற்கின்றானோ அவ்வாறு தான் மத்ரஸா மாணவனும் அப்பாடங்களைக் கற்றுக்கொள்கிறான். உயர்தர வகுப்பில் அரசியல், பொருளாதாரம், அளவையியல் கற்கும் பாடசாலை மாண வன்போன்றே மத்ரஸா மாணவனும் அப்பாடங்களைக் கற்றுக் கொள்கின் றான். இரு மாணவர்களுக்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை என்றால் மத் ரஸா மாணவன் அந்தப் பாடங்களைக் கற்றதில் எந்தச் சிறப்புமில்லை. பரீட் சையை மையப்படுத்தி இவ்வாறு கற்றாலும் இஸ்லாத்தை மையப்படுத்தி அல்லது முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கையை மையப்படுத்திக் கற்கும்போது அதில் வேறுபாடு காணப்பட வேண்டும்.

தான் படிக்கின்ற புவியியல், அரசியல், பொருளாதாரம் போன்ற சமூகவியல் பாடங்கள் இஸ்லாத்தின் போதனைகளு டன் எந்தளவு உடன்படுகின் றன, எந்த ளவு முரண்படுகின்றன. அது ஏன் என்பதை அவர்கள் விளங்க வேண்டும். இந்த உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் இத்துறை யில் ஆய்வுசெய்த முஸ்லிம் அறிஞர்கள் எவ்வாறு கண்ட றிந்து விளக்கியுள்ளார்கள் என்ற தெளிவைப் பெறக்கூடிய அறபு மொழியறிவு அவர்களுக்கு உண்டு. அறபு மொழியில் எழுதப்பட்ட நூல்களும் உண்டு. தஃவாவை மையப்படுத்திக் கற் கின்ற மாணவர்களுக்கு இதில் நிறைய பயனுண்டு.

அறிவை இஸ்லாமயப் படுத்தல் என்ற இஸ்லாமிய உலகின் நவீன முயற் சியை விளங்கவும், நடைமுறைப்படுத்தவும் நாம் தயாராக இல்லை யென் றால் சர்வதேச முஸ்லிம் உலகிலிருந்து நாம் பிரிந்து நிற்கவேண்டிய நிலைக் குத் தள்ளப்படுவோம். நவீன உலகை இஸ்லாமயப்படுத்து வதில் தளர்ந்துவிடு வோம். ஆகவே, இதற்கான ஆரம்ப முயற்சியாக மத்ரஸா மாணவர்களின் உலகக் கல்வி திசை திருப்பப்பட வேண்டும். இந்த நிலைக்கு மத்ரஸா மாணவ, மாணவியரை இட்டுச் செல்பவர் அல்லது வழிகாட்டுபவர் யார் என் பது அடுத்த கேள்வி யாக அமையலாம்.

இதற்குத் தகுதியானவர்களை இனம்காணுதல், உருவாக்குதல், பயிற்றுவித் தல், நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதல் போன்ற பணிகள் மூன்றாவது அணியினரின் கையில்தான் விடப்பட்டுள்ளன. மத்திய காலத்தில் இமாம்களான ஷாபிஈ, கஸ்ஸாலி, பஹ்ருத்தீன் ராஸி, ஜரீருத் தபரி, இப்னு கதீர், அப்துர் ரஹ்மான் மாவர்தி, இப்னு கல்தூன் போன்றவர்கள் இஸ் லாமியக் கற்கைத் துறைகளில் சிறப்புற்று விளங்கியதோடு இலக்கியம், மருத்துவம், தத்துவம், வரலாறு, அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்துள்ளனர். இருவகைக் கல்வி தொடர்பாகவும் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆக்கங்கள் இன்று கற்கப்படுகின்றன. இது அறிவை இஸ்லாமயப்படுத்தல் என்ற நவீன சிந்தனைக்கு வழிகாட்டியாக அமைந்தது.

சமய ஒப்பீட்டுக்கலை போன்று, இஸ்லாம் - சமூகவி யல், அறிவியல்-அழகி யல் துறைகளுக்கான ஒப்பீட்டுக் கல்வியும் இன்று தேவைப்படுகின்றன. இதனைச் செய்வதற்கு மத்ரஸாக்கள் தவிர, பொருத்தமான வேறு இடங்க ளில்லை. எனவே, ஷரீஆக் கல்வியையும் உலகியற் கல்வியையும் ஒரே கூறையின் கீழ் கொடுக்கின்ற மத்ரஸாக்கள் தமது கலைத்திட்டத்தில் இவ்வா றான கருத்துக்களை உள்ளீர்க்க வேண்டிய தேவை உள்ளது.

கல்வி என்பது மனிதனின் ஆளுமை விருத்திக்குத் துணைபுரிய வேண்டும். ஆளுமை விருத்தியில் மாறாத தன்மைகள் இருப்பது போன்றே கால வளர்ச் சிக்கும் சமூக மாற்றத்திற்குமேற்ப மாறுந் தன்மைகளும் செல்வாக்குச் செலுத் துகின்றன. இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதும் சமூகத்தின் இயக்கத் திற்கு வலுவூட்டுவதும் கற்றல், கற்பித்தற் செயற்பாட்டில் ஆர்வமுள்ள கல்வியலாளர் களின் பணியாகக் கருதமுடியும். இதுபற்றிச் சிந்திப்போமாக. (Meelparvai, Plus*)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)