Pages

Wednesday 21 July 2010

Dr. Jamal A. Badawi's (Plus*) Sri Lanka lecture tour

Dr. Jamal A. Badawi (Plus*) an Egyptian domiciled in Canada will be visiting Sri Lanka on a lecture tour organised by the Centre for Islamic Studies to coincide its 25th anniversary celebrations.



Dr. Jamal Badawi is to deliver three lectures;

01). “Reforming Islam or reforming Muslims?”, on July 30th at 7.00 PM in D.S. Jayasinghe Hall, Dehiwala,

02). “Muslim in a non Muslim Society” on July 31st at 4.30 PM in Hotel Ranmuthu, Colombo 3, and

03). “Role of Muslims on emerging Post-War Sri Lanka” on August 1st at 8.30 AM in Miami Reception Hall, Colombo 6.

(NB: Plus*: The holy quran says......the man was created weak....4:28)

Home                Sri Lanka Think Tank-UK (Main Link)

Tuesday 20 July 2010

'க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்' (Tamil Poem)

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

ஆனாலும்.....

மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய் இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு
நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(By Br. Mafaz)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday 18 July 2010

கிலாஃபா அழிக்கபட்டு 89 வருடங்களாகிறது



முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 89 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி. முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .

கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதாரபலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.

முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள், பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள், அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதிமுகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண்முன் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா, பொஸ்னியா, அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தினை நிலைநிறுத்திப்பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. .

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப்போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.

இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள், வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச்செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர். பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள் ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப்பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதிமுயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்

இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லி;ம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக்கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)

விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும், நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும் (3:118)

கிலாஃபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!

உலக அரங்கில் நீதியின் அச்சாணியாகத் திகழ்ந்த இஸ்லாமிய அரசின் வீழ்ச்சியின் இயற்கையான பின்விளைவுகளே முஸ்லிம்களுக்கும், ஏனைய உலக மக்களுக்கும் எதிராக நிகழ்ந்த கொடூரமான மனிதப்படுகொலைகளும், இன அழிப்புகளுமாகும் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் இஸ்லாமிய முறைமை அரச மட்டத்திலும், பொருளாதார, சமூக, அன்றாட வாழ்வியல் மட்டத்திலும் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதே, குஃப்ரின் கொடுமையில் களைத்துப்போன மனிதகுலத்திற்கு ஒரேயொரு விமோசனமாகும்.

“ (நபியே) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை” (அல் அன்பியா: 107)

முஸ்லிம்களே! அல்லாஹ்(சுபு) நம்மை முழு மனிதகுலத்திற்கும் சாட்சியாளர்களாய் நியமித்துள்ளான் என்பதை மறந்து விட்டீர்களா?

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகிறான்:

“ மேலும் (விசுவாசிகளே!) நீங்கள் ஏனைய மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதற்காகவும், (நம் ரசூல்) உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீதி செலுத்தும் சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.” (அல் பகறா: 143)

எனவே முழு மனிதகுலத்திற்குமான சாட்சியாளர்களாய் திகழும் பணி உறுதியான பலம், சுதந்திரமான அரசியல் நிலைப்பாடு, அரசியல் அதிகாரம் இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமான இஸ்லாமிய சிந்தனை என்பவற்றை கொண்ட ஒரு தலைமையின் கீழான முஸ்லிம் உம்மாவால் மாத்திரம்தான் முடியும்.

முஸ்லிம்களே! நாம் வாழ்ந்துவரும் சிதைவுற்ற வாழ்விலிருந்து இஸ்லாமிய வாழ்க்கை முறையை நோக்கி எழுச்சியடைய வேண்டிய பணி நமது கடமையும், அமானிதமுமாகும். நாம் இழந்த இஸ்லாமிய கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது அதிமுக்கிய கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு கலீஃபாவிற்கு தனது சத்தியப்பிரமாணத்தை (பையத்) செய்திருக்க வேண்டியது கடமையாகும்.

இப்னு உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,

“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் (பையத்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.” முஸ்லிம்)

முஸ்லிம்களே! முழு முஸ்லிம் உம்மத்தும் இன்றுவரை அனுபவித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுகாலமும் மாநாடுகளிலும், கூட்டங்களிலும், நிறுவனங்களிலும், இயக்கங்களிலும் நாம் ஆராய்ந்து வரும் தீர்வுகள் முறையான நிவாரணத்தையும், நிரந்தரமான தீர்வினையும் வழங்கவில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது. மாறாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு காரணம் நம்மை அழிக்க நினைக்கும் எதிரியை எதிர்கொள்வதற்கும், நாம் எதிர்நோக்கும் ஆபத்துக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கும் ரசூல்(ஸல்) கேடயமாக உவமித்த கலீஃபா இல்லாமையேயாகும்.

நபி(ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்:“

இமாம் ஒரு கேடயம் போன்றவர்;. அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவே நீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.” (முஸ்லிம்)

முஸ்லிம்களே! கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்டுவது என்பது ஒரு சில நல்ல முஸ்லிம்களின் கனவல்ல. அதேபோல அது வெறுமனவே விருப்பத்திற்குரிய ஒரு சிந்தனை மட்டுமல்ல. அது முஸ்லிம்கள் அனைவரினதும் கடமையும், மனிதகுலத்தின் தேவையுமாகும். அதற்கான முன்னெடுப்பு பிரார்த்தனை செய்வதுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக அது ஒரு ஜீவமரணப் போராட்டமாகும். முஸ்லிம்களே! கிலாஃபா என்பது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்களின் முக்கிய பொறுப்பாக விட்டுச்சென்றதாகும்.

அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

“ நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய ரசூலுல்லாஹ்வின்(ஸல்) கூற்று: பனிஇஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவார்கள்.”” அப்போது ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் “ அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ” என வினவினார்கள். அதற்கு ரசூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள் “ முதலாமவருக்கு பையத் செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பையத் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள். அல்லாஹ்(சுபு) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து கவனித்துக் கொள்வான்.” என்றார்கள். (முஸ்லிம்)

கிலாஃபா ஆட்சி முறை என்பது அபுபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையாகும். மேலும் அந்த ஆட்சி முறைக்கு கீழ் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மத் தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. எனவே எமதருமை முஸ்லிம்களே! அல்லாஹ்(சுபு)வும், ரசூலுல்லாஹ்(ஸல்) ம் வாக்களித்த கிலாஃபத்தின் மீள்வருகையின் பயணத்தில் பங்கு பெறுவது கடமையாகும். .

“ மனிதர்களே! உங்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்கு பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்கு பிறகு அமைதியை கொண்டு நிச்சயமாக மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பவராகி விட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காத பாவிகள்.” (24 : 55)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், “ உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மத்தின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்”  (Ends/)
 
Home                Sri Lanka Think Tank-UK (Main Link)